search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது ஹபீஸ்"

    • பெர்த் டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 271 ரன்னில் சுருண்டது.
    • 2-வது இன்னிங்சில் 89 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இருந்த போதிலும், ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேய மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என அந்த அணியின் டைரக்டர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஹபீஸ் கூறுகையில் "இந்தத் தொடருக்காக தயாராகும்போது, வீரர்களிடம் ஏராளமான திறமைகளை பார்த்தேன். ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் பகிஸ்தானால் வீழ்த்த முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுடைய திறமையை எங்களால் வெளிப்படுத்த முடியாமல் போனது. அணிக்காக நாங்கள் திட்டத்தை உருவாக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு அணியாக எங்களால் எங்களது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.

    வீரர்கள் சிறப்பாக விளையாட விரும்பினார். ஆனால், அவர்கள் அதை தங்களது ஆட்டத்தில் வெளிப்படுத்தவில்லை. ஒரு அணியாக சில தவறுகளை உருவாக்கினர். நாங்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சூழ்நிலை இருந்தது. அதற்கு ஏற்ப தயாரானோம். ஆனால், எங்களுடைய வெளிப்பாடு சிறப்பாக அமையவில்லை" என்றார்.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார்.
    • கடைசி மூன்று ரன்கள் எடுக்கும்போது, விராட் கோலியின் சுயநல உணர்வை பார்த்தேன் என ஹபீஸ் விமர்சனம்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார். அத்துடன் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சதன் செய்தார்.

    விராட் கோலி இந்த சதத்தை மிகவும் மந்தமாக அடித்தார். அதற்கு காரணம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. பந்து பேட்டிற்கு மிகவும் மெதுவாக வந்ததுதான். இதனால் பொறுமையாக கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்று சதம் அடித்தார்.

    ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான முகமது ஹபீஸ், விராட் கோலி சதத்தில் சுயநல உணர்வை கண்டேன் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன், விராட் கோலி பந்து வீச்சில் முகமது ஹபீஸ் க்ளீன் போல்டாகும் படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு "நீங்கள் விராட் கோலி பந்தில் போல்டாகினீர்கள். இதனால்தான் தொடர்ந்து அவரை சீண்டி வருவதாக என்று நான் பார்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் இடம் பெற்று இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு இப்பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன்கள் இன்சமாம்-உல்-ஹக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரையும் கொண்ட இக்குழு அணியின் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன். எப்போதும் போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் செயல் திறனை மதிப்பீடுவதற்காக நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய ஆலோசனை கூட்டத்தில் முகமது ஹபீசும் கலந்து கொண்டார். இதில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசம், துணை கேப்டன் ஷதாப்கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது.
    • ரோகித்சர்மா பலவீனமாகவும், பயத்துடனும் இருக்கிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார்.

    ஆசிய கோப்பை போட்டியில் ரோகித்சர்மாவின் பேட்டிங் குறித்தும், கேப்டன் பதவி குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவை போட்டியில் பார்க்கும் போது பலவீனமாக தெரிந்தார். அவர் பயத்துடன் இருக்கிறார். குழப்பமாகவும் காணப்படுகிறார்.

    இதற்கு முன்பு நான் அவரை இப்படி பார்த்ததில்லை. கேப்டன் பதவி ரோகித்சர்மாவுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது என்று நினைக்கிறேன். அவர் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்.

    ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது. ஐ.பி.எல்.லில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. கேப்டன் பதவியில் இந்திய அணிக்காக ஆடும் போது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

    அவர் பல விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவருக்கு அது சரியாக அமையவில்லை. பேசுவது எளிது. ஆனால் செய்வது கடினமானது. இது எனது கணிப்பு அல்ல. ரோகித் சர்மா முன்னோக்கி செல்வது கடினம் என்பது எனது கருத்தாகும்.


    கேப்டன் பதவியில் அவரால் நீண்ட காலம் நிலைத்து இருக்க முடியாது.

    ரோகித் சர்மா ரசித்து வெளிப்படுத்தும் ஆட்டத்தை பார்த்து இருக்கிறேன். ஆனால் அது மாதிரியான ஆட்டத்தை அவரால் தற்போது வெளிப்படுத்த இயலவில்லை. பல விஷயங்களை அவர் தவற விட்டுள்ளார். நான் அவருக்காக வருந்துகிறேன். இந்த விஷயத்தில் அவரோ இந்திய சிந்தனையாளர் குழுவோ முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 18 பந்தில் 12 ரன்னும், ஆங்காங்குக்கு எதிராக 13 பந்தில் 21 ரன்னும் எடுத்தார்.

    ×